ஸ்கிம்மர் கருவிகளை வைத்து வங்கியில் பணம் திருட்டு...
பதிவு : ஜனவரி 06, 2019, 10:43 AM
சென்னையில் ஸ்கிம்மர் கருவிகளை வைத்து வாடிக்கையாளர்களின் வங்கியில் இருந்து பணத்தை திருடிய வட மாநிலத்தவர்கள் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
* சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் சிலரது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து பணம் எடுக்கப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், பெருங்குடியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தை சுற்றி கண்காணிக்க துவங்கினர். 

* அப்போது, அங்குள்ள ஜூஸ் கடை ஒன்றில் ரொக்கமாக பணம் செலுத்த முடியாது என்பதும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மட்டும் பணம் செலுத்த முடியும் என்பதை போலீசார் கண்டறிந்தனர். விசாரணையை மேலும் தீவிரப்படுத்திய போலீசார், அப்படி பணம் செலுத்துபவர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை,  அந்த கடையில் பணிபுரிந்து வந்த வடமாநில கும்பல், தங்களிடம் உள்ள ஸ்கிம்மர் கருவி மூலம் திருடி, வாடிக்கையாளர்களின் ரகசிய எண்ணை கண்காணித்து, செல்போன் மற்றும் லேப்டாப்பில் சேகரித்து,  வந்தது தெரிய வந்தது. 

* இப்படி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல், குந்தன், சுரேஷ்குமார், ராகுல் குமார், சுதிர், பிகாஷ், உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து லேப்டாப், ஸ்கிம்மர் கருவி, செல்போன், டெபிட் கார்டுகள், இடிசி கருவிகள் மற்றும் 1 லட்சத்து 48 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

* அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்டு சேகரிக்கப்பட்ட தகவல்களை என்கோடர் என்ற கருவி மூலம் போலியான கார்டுகளுக்கு மாற்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்கள் மூலமாக  பணம் எடுத்து வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

* கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் பொதுமக்கள், OTP, Expiry date, CVV Number ​​போன்ற தகவல்களை யாரிடமும் நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ பகிரக்கூடாது என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வீட்டின் வெளியே இருந்த 2 சக்கர வாகனம் திருட்டு

பொன்னேரியில் மர்மநபர் ஒருவர் இருசக்கர வாகனம் ஒன்றை லாவகமாக திருடிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

272 views

சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

சென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

673 views

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

263 views

"சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது" - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

82 views

வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம் - வைகோ

"வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம்" - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

78 views

"மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது" - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.

797 views

பிற செய்திகள்

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

18 views

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.

48 views

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர்.

16 views

பாழடைந்த கிணற்றுக்குள் இளம்பெண்ணின் எழும்புக் கூடு

2012-ல் மாயமான பெண்ணா? கொலையா? என விசாரணை

9 views

பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு மயான காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.