ஜன.8,9-ல் அகில இந்திய வேலை நிறுத்தம் : தமிழக அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை
பதிவு : ஜனவரி 06, 2019, 10:37 AM
வரும் 8 மற்றும் 9ம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
* தலைமைச் செயலாளர் கிரிஷா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கீகரிக்கப்படாத சங்கத்தின் சார்பில் ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, போராட்டத்தில் பங்கேற்று அரசு நிர்வாகத்தை பாதித்தால் அது விதிமுறை மீறிய செயல் எனவும் அவர் கூறியுள்ளார். 

* வேலை நிறுத்தம் அன்று விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும் எனவும், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பணியிலிருந்து விடுக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வேலை நிறுத்தம் அன்று பணிக்கு வந்தவர்கள், வராதவர்களின் பட்டியலை அன்றைய தினம் காலை 10.30 மணிக்குள் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் எனவும் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.