பள்ளிகள், அரசு அலுவலகங்களை வெடி வைத்து தகர்ப்போம் - கடிதம் குறித்து போலீஸ் விசாரணை...
பதிவு : ஜனவரி 04, 2019, 11:10 AM
திருப்பூரில் பள்ளிகளை வெடி வைத்து தகர்க்கப் போவதாக கடிதம் அனுப்பிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
ஊத்துக்குளி அருகே மண்ணரை பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு வந்த கடிதத்தில், மண்ணரை செக்போஸ்ட் அருகே செயல்படும் சூதாட்ட விடுதியில் கஞ்சா விற்பனை, குட்கா பொருள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,  மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வெடி வைத்து தகர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கடிதம் குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால், போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.