பஞ்சலோக முருகன் சிலை மீட்பு : லேத் பட்டறை உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
பதிவு : டிசம்பர் 23, 2018, 02:20 PM
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலை மீட்கப்பட்ட சம்பவத்தில் கைதானவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில்,  சென்னை அருகே ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த லேத் பட்டறை உரிமையாளர் சிவகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலை மீட்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை வரும் ஜனவரி 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மீட்கப்பட்ட முருகன் சிலை 3 கிலோ 50 கிராம் எடை கொண்டது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, அரக்கோணம் அருகே நெமிலியில் உள்ள கோவிலில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.