பழைய துணியில் நாப்கின் தயாரிக்கும் இளைஞர்
பதிவு : டிசம்பர் 18, 2018, 07:04 PM
மாத விலக்கு காலத்தில் சுகாதாரம் பேணும் நாப்கின்கள் இன்னமும் எட்டாக் கனியாகவே உள்ளது இந்திய பெண்களுக்கு.
இந்தியாவில் 15 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட 42 சதவீத பெண்கள் மட்டுமே சானிடரி நாப்கின் பயன்படுத்துவதாகவும், 62 சதவீத பெண்கள் இன்னமும் துணிகளையே பயன்படுத்துவதாகவும் சொல்கிறது தேசிய குடும்ப சுகாதாரம் குறித்த ஆய்வு. சானிடரி நாப்கின்களை சமூக நோக்கத்தில் குறைவான விலைக்குத் தயாரிக்கும் முயற்சிகள் நடந்தாலும் அதை வாங்கக் கூட வசதியில்லாத பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களுக்காக பணியாற்றுகிறார் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரைச் சேர்ந்த சச்சின்.

சமாஜ்பந்த் என்கிற என்ஜிஓ அமைப்பை நடத்துவதுடன்,  சமூக வலை தளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு, பழைய துணிகளை சேகரிப்பதுடன், அதை சுத்தம் செய்து அதில்  இருந்து சானிடரி நாப்கின்களை தயாரித்து பழங்குடி பெண்களுக்கு அளித்து வருகிறார். மாத விலக்கு காலத்தில் சரியான பராமரிப்பு இல்லாமல் தனது தாயாருக்கு கருப்பை அகற்றப்பட்டது, இது என்னை வெகுவாக பாதித்ததால், இது போன்ற சூழல் வசதி இல்லாத பெண்களுக்கு ஏற்படக் கூடாது என்கிற நோக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, தற்போது வரை 2000 பெண்களுக்கு மாதந்தோறும் நாப்கின் அளித்து வருகிறேன் என்கிறார் . 

நாப்கின்களை அளிப்பதுடன், அப்பெண்கள் தங்கள் வீடுகளிலேயே சுத்தமான நாப்கின்களை தயாரிக்கவும் இவரது குழுவினர் சொல்லிக் கொடுக்கின்றனர். இவர்களிடம் நாப்கின் வாங்கத் தயங்கும் பெண்களுக்கு பெண் தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்க்கின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.