காற்று, குளிரை மட்டுமே தந்த 'பெய்ட்டி'
பதிவு : டிசம்பர் 17, 2018, 05:27 PM
ஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது.

ஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது. வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல், கடலோர மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி சென்றது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதன் பாதிப்பிலிருந்து முழுமையாக மீள்வதற்குள், சென்னையை குறிவைத்து மற்றொரு புயல் நகர்ந்து வருவதாக தகவல் வெளியானது. கடந்த 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதி, மறுநாளே தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

சாதகமான பருவநிலை காரணமாக இது மேலும் வலுவடைந்து, கடந்த 15-ம் தேதி புயலாக உருவெடுத்தது. பெய்ட்டி என பெயரிடப்பட்ட இந்த புயல், சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே கஜா புயல் பாதிப்பில் இருந்த மீளாத தமிழகத்தில் இது மேலும் பீதியை ஏற்படுத்தியது. கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களுக்கு, பெய்ட்டி புயலால் எந்த பாதிப்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், அது சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழையை கொடுக்கும் என கூறியது.

ஆனால், திடீரென பெய்ட்டி புயல் படிப்படியாக ஆந்திர கரையை நோக்கி வடக்கு திசையில் நகர்ந்தது. தமிழகத்தில் கரையை கடக்கவில்லை என்றாலும், பெய்ட்டி புயலால் 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்தது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், புயல் மழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகமும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. ஆனால், பெய்ட்டி புயலால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. காற்று மற்றும் குளிரை மட்டுமே உணர முடிந்தது. புயல் பாதிப்பிலிருந்து தப்பியுள்ள தமிழக மக்கள் இதனால் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உரிய ஆவணமற்ற வைரம், தங்க நகைகள் பறிமுதல்

11 கிலோ தங்கம் 3 கிலோ வைரம் சிக்கின

42 views

ஆந்திராவில் தொடரும் வாகன சோதனை

30 கிலோ தங்க பிஸ்கட் பறிமுதல்

28 views

கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

231 views

பிற செய்திகள்

இரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது

2 views

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

6 views

பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்

பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

11 views

ரெயின் டிராப்ஸ் அமைப்பு சார்பில் பெண் சாதனையாளர்களுக்கு விருது

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 20 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

10 views

ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்

10 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.