சிறையில் சசிகலாவிடம் 2 - வது நாள் விசாரணை
பதிவு : டிசம்பர் 14, 2018, 09:21 PM
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 - வது நாளாக விசாரணை நடத்தினர்.
வீரராகவன் தலைமையில், 7 அதிகாரிகள் குழு, காலை 9.30 மணிக்கு சிறைக்குள் சென்றனர். இடைவிடாது மாலை 6.30 மணி வரை, சசிகலாவிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் , பல்வேறு கேள்விகளை கேட்டு, பதிவு செய்து கொண்டனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர் இல்லங்களில் நடைபெற்ற சோதனையின்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், இந்த விசாரணை நடத்தப்பட்டது. 2 நாள் விசாரணை முடிந்து விட்டதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் அனுமதி பெற்று சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.