நாளை காலை ஸ்டாலினை சந்திக்கிறார் செந்தில் பாலாஜி...
பதிவு : டிசம்பர் 13, 2018, 12:25 PM
மாற்றம் : டிசம்பர் 13, 2018, 12:48 PM
சென்னையில் நாளை காலை 11.30 மணிக்கு ஸ்டாலினை சந்திக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருப்பவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர், அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகி இருந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் அவரும் ஒருவர். சமீப காலமாக, தினகரன் மீதான அதிருப்தி காரணமாக,  அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்,  தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அந்த கட்சியில் செந்தில் பாலாஜி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, பேருந்துகள் மற்றும்  கார்களில் அவரது ஆதரவாளர்கள், சென்னைக்கு வரவுள்ளனர். இன்று  பிற்பகலில், கோவையில் இருந்து விமானம் மூலம் செந்தில் பாலாஜி சென்னை வருவதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் செந்தில்பாலாஜி, கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இருந்து 96ம் வருடம் அ.தி.மு.க.வுக்குப் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3353 views

பிற செய்திகள்

"புகழ் மிக்கவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது, அரசு" - முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

12 views

சபரிமலை விவகாரம் : "கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது" - பிரதமர் மோடி

மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்படவில்லை என்று கேரள அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

184 views

கோடநாடு விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - பொன் ராதாகிருஷ்ணன்

75 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றும்‌ என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

25 views

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

18 views

"கூட்டணி குறித்த தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் வருகிறது" - தமிழிசை சவுந்திரராஜன்

"அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை" - தமிழிசை சவுந்திரராஜன்

34 views

ஜெயலலிதா நினைவிடத்தில் பொங்கல் படையல் செலுத்திய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பொங்கல் படையல் வைத்து மரியாதை செலுத்தினார்.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.