சென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
பதிவு : டிசம்பர் 13, 2018, 09:50 AM
சென்னையில் காவல்துறையினர் சார்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னை மாநகரம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவும் காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருப்பது சிசிடிவி கேமராக்கள் தான்...

சுமார் ஒரு கோடி பேர் வசிக்க கூடிய சென்னையில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து காவல் துறைக்கு பெரிய தலைவலியை உண்டாக்கி வந்தன. குறிப்பாக இரவு நேரத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு சவாலாகவே இருந்து வந்தது . 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க  சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி சென்னை பெருநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை , ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு  24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் எழும்பூர் இரயில் நிலையம் , கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை போன்ற பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர் சென்னை காவல்துறையினர். 

குறிப்பாக சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இரவில்  வண்ண விளக்குகளால் ஒளிவருவதால் குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்களிடையே ஒரு பயத்தை உண்டாக்குகிறது

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3356 views

பிற செய்திகள்

கடத்தல் கும்பல் தலைவனிடம் இருந்த 21 கிலோ தங்கம் பறிமுதல்

கடத்தல் கும்பல் தலைவனிடம் இருந்த 21 கிலோ தங்கம் பறிமுதல்

7 views

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

5 views

மாட்டு​ப்​பொங்கல் - கோயில்களில் சிறப்பு வழிபாடு

மாட்டு​ப்​பொங்கல் - கோயில்களில் சிறப்பு வழிபாடு

4 views

"சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும்" - கமல்ஹாசன்

சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

14 views

"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கமல்?" - கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறப்பு

13 views

"ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதே நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்

கொட நாடு விவகாரம் குறித்து கருத்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.