நாளை யானைகள் புத்துணர்வு முகாம்
பதிவு : டிசம்பர் 13, 2018, 09:45 AM
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நாளை தொடங்குகிறது.
தமிழக அறநிலையத்துறையின்  கட்டுப்பாட்டில் செயல்படும்  கோவில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில்,  கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டு தோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முகாம் நாளை தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் யானைகள் முகாமிற்கு புறப்பட்டு செல்கின்றன.
நாளை தொடங்கும் புத்துணர்வு முகாம் அடுத்த மாதம் 30-ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.  இதனால் முகாமிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை , சரிவிகித உணவு, எடை பராமரிப்பு , உடற்பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளது.
முகாமிற்கு புறப்பட்டு சென்ற யானைகள்

தேக்கம்பட்டியில் நடைபெறும் புத்துணர்வு முகாமிற்கு,  நெல்லை நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி , சங்கரன்கோவில் கோமதியம்மன் கோயில் யானை கோமதி ,தென்காசி இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி , திருக்குறுங்குடி கோயிலில் உள்ள இரண்டு யானைகள் உள்பட 5 யானைகள் லாரி மூலம் தேக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டன.
முகாமிற்கு புறப்பட்டு சென்ற ராமநாதசுவாமி கோயில் யானை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி,  யானைகள் புத்துணர்வு முகாமிற்கு தனி வாகனத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. முன்பாக யானை ராமலட்சுமிக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு  தீபாராதனை நடைபெற்றது.
 முகாமிற்கு சென்ற ஒப்பிலியப்பன் கோயில் யானை 

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா,   லாரி மூலம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது.   முன்னதாக யானை பூமாவிற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டன.பிற செய்திகள்

"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு

பள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

30 views

இரண்டாம் நிலை காவலர் தேர்வு : "திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.

15 views

இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு

பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லி வந்தடைந்தார்.

20 views

"கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" - ரிசர்வ் வங்கிக்கு கேரள முதலைமைச்சர் வேண்டுகோள்

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

9 views

அரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

24 views

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு

லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.