கஜா புயல் நிவாரணம் - தமிழக அரசு மீது மத்திய அரசு புகார்...
பதிவு : டிசம்பர் 12, 2018, 04:41 PM
கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை தயாரிப்பதற்கு தேவையான விளக்கங்களை, தமிழக அரசு தரவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
கஜா புயல் பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வும் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து சென்ற மத்தியக் குழு, எப்போது தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அறிக்கை தாக்கல் செய்ய சில விளக்கங்கள் தேவைப்படுவதாகவும் அவற்றை தராமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்தியக் குழுவிற்கு தேவையான விளக்கங்களை இன்றே தருவதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்தார். இதையடுத்து எப்போது அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதை கேட்டு தெரிவிக்கும்படி மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4715 views

பிற செய்திகள்

படைகலன் தொழிற்சாலை தினவிழா - ஆயுதம் மற்றும் புகைப்பட கண்காட்சி

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

2 views

"2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

28 views

பேஸ்புக் மூலம் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவேக் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்.

20 views

காங்கிரசில் இணைந்த பாஜக துணைத்தலைவர்

திரிபுரா மாநில பாஜக துணைத்தலைவர் சுபால் பெளமிக்,பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

22 views

ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு : வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 views

ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம்

ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.