சபரிமலை விவகாரம் : கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி
பதிவு : டிசம்பர் 12, 2018, 12:57 PM
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்டப்பேரவையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை கேரள சட்டப்பேரவை கூடியதும், பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கேரள சட்டப்பேரவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.