அரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்
பதிவு : டிசம்பர் 09, 2018, 09:47 PM
தேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்குமான அரையாண்டு வினாத்தாள்கள், தேவகோட்டை அரசு பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அப்பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் அறையின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை  திருடி சென்றுள்ளனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். வினாத்தாள்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரையாண்டு தேர்வுகள் நாளை தொடங்க உள்ள நிலையில் வினாத்தாள்கள் திருடப்பட்ட சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.