விழா மேடையில், மயங்கிய மத்திய அமைச்சர் - வேளாண் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு
பதிவு : டிசம்பர் 08, 2018, 10:24 AM
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. நாக்பூர் அருகே அகமத் நகரில் வேளாண் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நிதின் கட்கரி பங்கேற்றார். தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தீடிரென அவர் மயங்கி சரிந்தார்.  அவரை அருகில் உள்ளவர்கள் தாங்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, விழா அரங்கில் அதிக வெப்பம் இருந்ததாகவும், எனவே தான் மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தனக்கு சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் அவர் கூறினார். சர்க்கரை அளவு குறைந்ததால் கட்கரிக்கும் மயக்கம் ஏற்பட்டதாக முதலில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

952 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4750 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2603 views

பிற செய்திகள்

விமானப்படை வீராங்கணைகளின் பயிற்சி நிறைவு : நிறைவு விழாவில் பிபின் ராவத் பங்கேற்பு

ஹைதராபாத்தில் உள்ள டன்டிக்கல் ராணுவ பயிற்சி முகாமில், பயிற்சி முடித்த விமானப்படை வீராங்கரனைகளின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது.

1 views

ரபேல் விவகாரம் : "விசாரணைக்கு தயாரா?" - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி

ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

9 views

பசுவை 'தேச மாதா'வாக அறிவிக்க வேண்டும் : இமாச்சல் பிரதேசத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பசு மாட்டை 'தேச மாதா'வாக அறிவிக்க கோரும் தீர்மானம் ஒன்று, இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

14 views

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

23 views

பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை

மத்திய அரசின் நல்ல திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.

36 views

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும் -கிரண் பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார்

அரசியல் பற்றி பேசுவதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு பேச வேண்டும் என, ஆளுநர் கிரண்பேடிக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.