இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம்...
பதிவு : டிசம்பர் 08, 2018, 03:53 AM
பள்ளிகளில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம், சோதனை அடிப்படையில் வரும் 10ஆம் தேதி சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் அமல்படுத்தப்படுகிறது.
அரசு பள்ளிகளில் பதிவேடு மூலமாக மாணவர்களின் வருகையை பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறைக்கு மாற்றாக, நவீன முறையில் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் பேஸ் ரீடிங் முறை, சோதனை அடிப்படையில் வரும் 10ஆம் தேதி சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல்படுத்தப்படவுள்ளது.  இந்த பள்ளியில் உள்ள ஒரே ஒரு வகுப்பறையில் மட்டும், இந்த திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் 
துவக்கி வைக்கிறார். இந்த முறையில் மாணவர்கள் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்து கணிப்பொறியில் இணைத்துவிடுவர். பின்னர் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்ததும், ஆசிரியர் ஒரு புகைப்படம் எடுத்து அதனை கணிப்பொறியில் இணைத்ததும் புகைப்படங்களை சரிபார்த்து, எத்தனை பேர் வந்திருக்கிறார்கள், எத்தனை பேர் வரவில்லை என கணிப்பொறி கூறிவிடும். அத்துடன் இணையதளம் வழியாக இந்த தகவல், தலைமை ஆசிரியர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சென்றடையும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தை பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன மூலம் அரசு செயல்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டம், தமிழகத்தில் அரசு பள்ளியில், செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது. 

பிற செய்திகள்

காது கேட்காத குழந்தைக்கு உயர் சிகிச்சை

சத்தங்களை கேட்டு அழுத குழந்தை : பெற்றோர்கள், மருத்துவர்கள் மகிழ்ச்சி

3 views

விமான நிலைய நடைமேடை அருகே தீ விபத்து

விமானத்திற்கு சார்ஜ் ஏற்றும் வாகனம் எரிந்தது

29 views

தனித்தேர்வர்கள் எழுதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 22 மற்றும் 25 ம் தேதி முதல் ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு பொது தேர்வை தனி தேர்வாக எழுதும் மாணவர்கள், வரும் 25ஆம் தேதி காலையில் இருந்து தேர்வுக் கூட அனுமதி சீட்டை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

26 views

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் : அதிவேகத்தால் நிகழ்ந்த விபத்து

கோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.

361 views

தேரோட்டம் - அமைச்சர், பக்தர்கள் பங்கேற்பு

கரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.

9 views

காங்கிரஸ் பிரமுகரின் வாகனம் திருட்டு : சி.சி.டி.வி.-யில் பதிவான காட்சிகள்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.