அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடு - ஒரு நபர் குழுவின் அறிக்கை ஓரிரு நாளில் தாக்கல் என தகவல்
பதிவு : டிசம்பர் 08, 2018, 03:44 AM
அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களையும் வகையில் தமிழக அரசு அமைத்த ஒரு நபர் குழுவின் அறிக்கை ஓரிரு நாளில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு அரசு செயலர் சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் ஏழு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்,100க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், தனி நபர்கள் என பலரும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதுவரை  பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் ஆசிரியர்களே பெரும்பான்மையாக கோரிக்கை மனுக்களை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் துறை ரீதியான மனுக்கள் என அதன் தன்மைக்கு ஏற்ப  பிரிக்கப்பட்டு பின்பு அவர்களை நேரில் அழைத்து கருத்துக்களை கேட்டது. தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், முதலமைச்சரிடம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஏற்கனவே ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்ரீதர் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி : நிலுவை ஊதியம், போனஸ் கேட்டு அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போனஸ், பென்ஷன் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

24 views

4 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் : இடமாற்றம் செய்ய உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1232 views

பிற செய்திகள்

"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.

5 views

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது

5 views

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த தேயிலை பூங்கா

ஊட்டியில் அமைந்துள்ள தேயிலை பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

7 views

வீடு புகுந்து ஒருவர் வெட்டிக்கொலை : தலையை பையில் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்

மதுரை அய்யனார்புரம் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் லோகநாதன்.

6 views

கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

சென்னை ஆவடி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.