நிலக்கோட்டை அருகே 2 பேர் கள்ளச் சாராயம் குடித்து சாகவில்லை - காவல்துறை விளக்கம்
பதிவு : டிசம்பர் 07, 2018, 04:42 AM
கள்ளச்சாராயத்திற்கு இருவர் பலியானதாக செய்தி வெளியான நிலையில் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்ததே மரணத்திற்கு காரணம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்ததாக கடந்த 5 ஆம் தேதி செய்தி வெளியானது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பின்னர், கள்ளச்சாராய சாவுகளே இல்லை என்று, சொல்லப்பட்ட நிலையில், மது குடித்த இருவர் உயிரிழந்ததாக வந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த இருவர் மரணம் குறித்து, காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. கொடைரோடு அரசு மதுபான கடை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்த, ராஜலிங்கத்திடம் பள்ளப்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மதுப்பாட்டில்களை வாங்கி சில்லறை விற்பனை செய்து அதில் வரும் லாபத்தை இருவரும் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஜெயச்சந்திரன் வேறு ஒரு மதுபானக்கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி, தனியாக விற்பனை செய்து முழு லாபத்தை அனுபவித்து வந்தது ராஜலிங்கத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஜெயச்சந்திரனை பழி வாங்க திட்டமிட்ட, ராஜலிங்கம், ஜெயச்சந்திரனின் முன்னாள் எதிரி தமிழ்வாணன் என்பவரை, சேர்த்து கொண்டு சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஓல்டு செஃப், மது பாட்டில்களை வாங்கி, அதில் தமிழ்வாணனின் உறவினர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து வாங்கிய வெள்ளை பாசானத்தை, ராஜலிங்கம் கலந்துள்ளார். பின்னர், அதனை செந்தில் என்பவர் மூலம், ஜெயச்சந்திரன் கடைக்கு அனுப்பி முதலில், 5 ஓல்டு செஃப் பாட்டில்களை வாங்கி விட்டு பின்னர், அது வேண்டாம் என்று கூறி, தாங்கள் கொண்டு சென்ற விஷம் கலந்த பாட்டிலை கடையில் கொடுத்துள்ளனர். கடந்த 5 ஆம் தேதி அதிகாலை ஜெயச்சந்திரனின் சிக்கன் கடையில், மது வாங்கிய முருகன், சமயன் மற்றும் தங்கப்பாண்டி என்பவரிடம் விஷம் கலந்த மதுப்பாட்டிலை, செல்வம் வழங்கியுள்ளார். அதை குடித்த முருகனும், சமயனும் இறந்து விட்ட நிலையில் தங்க பாண்டி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனை தொடர்ந்து, கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ராஜலிங்கம், வெள்ளை பாசானம் வழங்கிய பாலு உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.  

மேலும், சட்டவிரோதமாக சில்லறை மது பானம் விற்பனை செய்த ஜெயச்சந்திரன், செல்வம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த இருவரின் மரணத்திற்கு காரணம், தனிப்பட்ட விரோதங்களால் திட்டமிட்டு மதுபானத்தில் விஷம் கலக்கப்பட்டதே என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. கள்ளச்சாராயத்திற்கு இருவர் பலியாகி விட்டதாக செய்தி வெளியான நிலையில், தனி நபர்களுக்கிடையே இருந்த மோதல் காரணமாக, இருவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிற செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு, காளைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு, காளைகளை தயார்படுத்தும் முயற்சியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

1 views

கஜா புயலால் களையிழந்த புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது.

46 views

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

53 views

குட்கா முறைகேடு விசாரணை : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

8 views

வட தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யும் - வானிலை மைய இயக்குநர்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட தமிழக கடலோரத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

204 views

மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத்தர அரசு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

12ம் வகுப்பு பாடங்களை பாதியாக குறைப்பது குறித்து அரசு பரிசீலனை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.