தமிழக மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
பதிவு : டிசம்பர் 06, 2018, 04:19 PM
ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவர்களை தொடர்பு கொள்ள ஜிபிஎஸ் மற்றும் 'நேவிக்' கருவிகள் வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* இது தொடர்பான அரசாணையில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 3 புள்ளி 40 கோடி ரூபாய் செலவில் 181 சாட்டிலைட் போன்கள், 240 'நேவிக்' கருவிகள், 160 'நேவ்டெக்' கருவிகள் வாங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் முதற்கட்டமாக 21 யூனிட் சேட்டிலைட் போன்கள் வாங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருவிகள் தமிழகத்தில் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் ஆயிரத்து 500 படகுகளுக்கு வழங்கப்படும் எனவும் 15 முதல் 20 படகுகள் கொண்ட  ஒரு குழுவிற்கு 2 சேட்டிலைட் போன்கள், மூன்று நேவிக் மற்றும் இரண்டு நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

* இதன்மூலம் பேரிடர் காலங்களில் முன்கூட்டியே ஆழ்கடல் சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு பிளீடர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராக பணியாற்றிய டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய மணிசங்கர் ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

101 views

அரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்

தமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

649 views

"தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

139 views

பிற செய்திகள்

புற்றுநோயால் கர்ப்பப்பை இழந்த பெண்ணிற்கு குழந்தை...

புற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.

67 views

பள்ளிக்கு சீர்வரிசை அளித்த மக்கள் : ஊர்வலமாக கொண்டு வந்து ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.

6 views

மணல் கொள்ளையை தடுத்த காவலர் கொலை வழக்கு : 6 பேர் கைது - வழக்கு விசாரணை முடிவடைந்தது

நெல்லை மாவட்டம் கீழசிந்தாமணி பகுதியை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை, தாமரைக்குளம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற போது மணல் கொள்ளையர்களால் அடித்து கொல்லப்பட்டார்.

21 views

மதவெறி பிடித்த, இந்தியை திணிக்கும் ஆட்சி - ஸ்டாலின்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரடிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

21 views

மதுக்கடைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்...

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருந்த மதுக்கடையை, வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

20 views

செய்யாறு குறுக்கே புதிய அணைக்கட்டு : காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றின் குறுக்கே 7 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அணைக்கட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.