அதிமுக-வினர் வைத்த ஜெயலலிதாவின் படம் உடைப்பு
பதிவு : டிசம்பர் 06, 2018, 06:44 AM
அதிமுக-வினர் சாலை மறியல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி, சங்கரன்கோவில் பேருந்து நிலையம்  அருகே அதிமுக-வினர் வைத்திருந்த ஜெயலலிதாவின் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதே சமயம் அருகில் அமமுக-வினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படம் மாயமானது. இதை அறிந்த இருதரப்பினரும் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதிமுகவினர் மர்ம நபர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் 
ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

975 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4788 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2619 views

பிற செய்திகள்

சென்னை மற்றும் தஞ்சாவூரில் சிபிஐ சோதனை

சென்னை மற்றும் தஞ்சாவூரில் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

0 views

ரூ. 388 கோடியில் முக்கொம்பில் புதிய அணை

திருச்சி - கொள்ளிடம் ஆற்றின் முக்கொம்பில், இடிந்த மேலணைக்கு பதிலாக 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

5 views

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

20 views

நெல்லையில் "பெரியார் பேருந்து நிலையம் " : அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நெல்லை மாநகர சந்திப்பில், 79 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 3 அடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடிக்கல் நாட்டினார்.

24 views

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் மாயம்

சென்னை - திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில், கஸ்தூரி என்ற கர்ப்பிணி பெண், பிரசவ தேதி குறிக்கப்பட்ட நாளில் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

22 views

குரூப் - 2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆயிரத்து 200 பதவிகளுக்காக நடத்தப்பட்ட குரூப் - 2 , முதல் நிலை தேர்வு முடிவு, வெளியாகி உள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.