வடமாநில இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - 4 இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை...
பதிவு : டிசம்பர் 06, 2018, 04:51 AM
கும்பகோணத்தில் வடமாநில இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
வங்கி ஒன்றில் பயிற்சிக்காக டெல்லியை சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் ரயில் மூலம் கும்பகோணத்துக்கு செவ்வாய் கிழமை இரவு வந்துள்ளார். அங்கிருந்து  குறிப்பிட்ட ஒரு ஹோட்டலுக்கு செல்வதற்காக  ஆட்டோவில் ஏறிய இந்தி மட்டுமே தெரிந்த, அந்த இளம் பெண்ணை ஆட்டோக்காரர் திசைமாறி அழைத்து  சென்றுள்ளார்.  சுதாரித்துக் கொண்ட அவர் கூச்சலிட்ட படியே ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். காரைக்கால்  புறவழிச்சாலைக்கு ஓடிவந்த இளம்பெண் அங்கிருந்த  2 பேரிடம் உதவி கேட்க, அவர்கள் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்துள்ளனர். ஒருகட்டத்தில் பயந்து போய் ஆட்டோவில் குறிப்பிட்ட ஓட்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் தனது தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரது தந்தை அளித்த புகாரில் இந்த இளம் பெண்ணை மீட்டு பாதுகாப்பு அளித்த போலீசார், மண்டபம் பகுதியை சேர்ந்த 4 பேரை  பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே  கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அந்த இளம் பெண் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.  சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார் நேரில் விசாரணை நடத்தி உள்ளார். இந்த நிலையில் வசந்த், தினேஷ் ஆகியோர் மீது கடத்தல், கொலை மிரட்டல்,  பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்க​ளை 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, மேலும் இருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டம்

கர்நாடகாவில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய ரக்‌ஷனா கேந்த்ரா சமிதி அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

189 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

381 views

பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

999 views

அமெரிக்காவை உலுக்கும் பாலியல் புகார்...

நீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.

928 views

பிற செய்திகள்

தமிழக சுங்கச் சாவடிகளில் 5 ஆண்டுகளில் ரூ.9,842 கோடி வசூல்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 9 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

27 views

பழமையான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 views

சென்னையில் கருப்பை வாய் புற்றுநோய் ஆய்வகம்

நாட்டிலேயே முதல்முறையாக கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் மூலக்கூறு ஆய்வகத்தை சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் அறிமுகம் செய்துள்ளது.

13 views

கோழிகள் வளர்ப்பு - தேசிய கருத்தரங்கம்

கோழிகள் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துவதில் உள்ள வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் தொடங்கியது.

9 views

கஜா புயல் எதிரொலி - சம்பா சாகுபடி பாதிப்பு

'கஜா' புயலின் தாக்கத்தால் சம்பா சாகுபடியின் மகசூல் பாதியாக குறைந்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

7 views

பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் : தொழிலாளர்கள் தவிப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.