நிவாரணப் பொருட்களை வழங்க வந்த உதயநிதி - தள்ளுமுள்ளுவில் இருவர் காயம்
பதிவு : டிசம்பர் 06, 2018, 01:40 AM
உதயநிதியை காண அவரது ரசிகர்களும், திமுகவினரும் திரண்டு வந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு.
நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை வந்தார். தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த உதயநிதியை காண அவரது ரசிகர்களும், திமுகவினரும் திரண்டு வந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் உதயநிதியின் பாதுகாவலர் இருதரப்பினரையும் ஒதுக்கிவிட்டு அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். இதில் இரண்டு ரசிகர்கள் காயமடைந்தனர். 

நிவாரணப் பொருட்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.  2 மணிநேரத்திற்கு மேல் நின்று அவரே நேரடியாக வழங்கியதால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். தொடர்ந்து தஞ்சை நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் மன்னார்குடி அருகே நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டார். மக்கள் சாப்பிட அரிசி வேண்டும் என தெரிவித்ததை அடுத்து, 700 குடும்பத்திற்கு மாலைக்குள் அரிசி வீடு தேடி வரும் உறுதி அளித்ததை அடுத்து, மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2675 views

பிற செய்திகள்

மேகதாது அணை கட்ட ஒருசெங்கல்கூட வைக்க முடியாது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மேகதாது அணை கட்ட ஒருசெங்கல்கூட வைக்க முடியாது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

2 views

அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

5 views

மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்ற தேர்தல் தான் காரணம் - திருநாவுக்கரசர்

மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்ற தேர்தல் தான் காரணம் - திருநாவுக்கரசர்

3 views

விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்

விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்

5 views

நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்

நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்

6 views

"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை" - அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.