பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் - சிக்கியது எப்படி?
பதிவு : டிசம்பர் 05, 2018, 04:11 PM
சென்னையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த சத்தியராஜ் என்ற சஞ்சீவ், முறையான அனுமதி இல்லாமல், சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பெண்கள் விடுதி ஒன்றை தொடங்கி இருந்தார். சஞ்சீவின் ஆன்லைன் விளம்பரத்தைக் கண்டு, பெண்கள் அங்கு வந்து தங்க தொடங்கினர். சஞ்சீவ், அவ்வப்போது விடுதிக்குள் சென்று, பார்வையிடுவார் என்றும், பல நேரங்களில் குளியலறை வரை சென்று பார்ப்பார் என்றும் கூறப்படுகிறது. 

கடந்த 2 மாதங்களாக செயல்படும் இந்த விடுதியில் software துறையில் பணிபுரியும் ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் தங்கியிருந்தனர்.  கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், SOFTWARE-ல் பணிபுரியும் மற்றொரு பெண், விடுதியில் சேர்ந்துள்ளார். எங்கு சென்றாலும், ரகசிய கேமராக்களை கண்டறியும் MOBILE app-யை பயன்படுத்தும் வழக்கம் கொண்ட அந்தப் பெண், யதேச்சையாக விடுதியிலும் அதை ஆன் செய்துள்ளார். அப்போது, குளியலறை ஷவர், ஸ்விட்ச் பாக்ஸ், கண்ணாடு என பல பகுதிகளில் ரகசிய கேமராக்கள் இருப்பதாக அந்த ஆப் காட்ட அந்தப் பெண் அதிர்ந்துள்ளார். இதையடுத்து, மற்ற பெண்களுடன் சேர்ந்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, சஞ்சீவிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.

வாடகையை குறைக்க மறுத்ததால், பெண்கள் தன் மீது பழிபோடுவதாக சஞ்சீவ் மறுக்க, அவரை விடுதிக்கு அழைத்துச் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது  பல்வேறு இடங்களில் இருந்த கேமராக்களை போலீசார் வெளியே எடுத்தனர். ஆனால் கேமராவை யார் வைத்தது என தனக்கு தெரியாது என்று சஞ்சீவ் மறுத்துள்ளார். அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள் மூலம் அவர், கேமராக்களை வைத்தது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சஞ்சீவ் மேல், ஏற்கனவே ஒரு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

303 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3893 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5827 views

பிற செய்திகள்

முதல்வருடன் "தினத்தந்தி " நிர்வாக இயக்குனர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.

37 views

"2 ஆண்டு ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் நடந்துள்ளது" - ஜி.கே.வாசன்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

345 views

டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

37 views

Sharon Plywood நிறுவனத்தின் "I AM Strongest" விருதுகள்

குழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்

20 views

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது

322 views

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.