பள்ளிகளுக்கு மழை விடுமுறை அறிவிப்பதில் கட்டுப்பாடு...
பதிவு : டிசம்பர் 05, 2018, 01:00 PM
மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில், புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை விதித்துள்ளது.
* மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. சமீபத்தில் கஜா புயலால்,  நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன.

* இந்த நிலையில், விடுமுறை அறிவிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். 

* அந்த உத்தரவில், வெள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து முடங்கும் சூழல் உருவானால் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் மிதமான மழையோ அல்லது துாறலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. 

* மாவட்ட நிலைமையை, முதன்மைக் கல்வி அதிகாரிகள் நன்றாக ஆய்வு செய்து, விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும்

* பள்ளி திறப்பு நேரத்துக்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக முடிவெடுத்து, விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

* ஒட்டு மொத்தமாக மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது எனவும் அடிக்கடி விடுமுறை விடுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதை உணர்ந்து ஆட்சியர்கள் செயல்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...

பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.

144 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

167 views

ஆய்வின் போது மக்களின் வலியை உணர்ந்தோம் - மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட்

தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் , விரைவில் அரசிடம் ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

58 views

தமிழரசு கட்சியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்

இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

970 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

598 views

பிற செய்திகள்

ஒசூர் : முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

77 views

கணவனையும், குழந்தையையும் மனைவியே கொன்ற வழக்கு : கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் கணவனையும், ஒரு வயது குழந்தையும் கொன்ற வழக்கில், ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

1032 views

காவல் நிலைய வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பழைய கார்கள்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா டி - 5 காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய கார், வேன்களில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.

42 views

சூலூர் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு : மனநிறைவாக உள்ளது - ம.நீ.ம. வேட்பாளர் கருத்து

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

38 views

ஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆர்வத்துடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

29 views

கல்லால் தாக்கி இளைஞர் படுகொலை : போலீசார் தீவிர விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு பேருந்து நிறுத்தம் அருகில், மயில்சாமி என்ற இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

124 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.