ஜெயலலிதா-வின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் - அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மும்முரம்
பதிவு : டிசம்பர் 05, 2018, 12:49 AM
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்த உள்ளனர். ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஜெயலலிதா நினைவிட பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாலாஜா சாலையில் இருந்து, ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி பேரணி நடப்பதால், சாலை முழுவதிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவிட பகுதியில், கட்டுமான பணிகள் நடந்து வருவதால், பள்ளங்களில் யாரும் விழுந்துவிடாமல் இருக்க, தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவுதினம்: அ.ம.மு.க-வினர் அமைதிப் பேரணி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே அமைதிப் பேரணி நடைபெற்றது.

132 views

பிற செய்திகள்

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு : 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் போலீஸ் காவலுக்கு அழைத்து வரப்பட்ட 3 பேர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

113 views

விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாமக்கல் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

14 views

மதுபான கடைகள் செயல்படும் இடங்களை வகைப்படுத்த உத்தரவு

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

26 views

பா.ம.க.வை கிண்டலடித்து முகநூலில் பதிவு: இளைஞரை கைது செய்தது போலீஸ்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பா.ம.க.வினரை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

547 views

முக்கொம்பு மேலணையின் கதவணை கட்டுமானப் பணிகள் : விரைந்து முடிக்கக் கோரிக்கை

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, முக்கொம்பு மேலணைக்காக, புதிய கதவணைகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

17 views

இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சிவகங்கை, பாட்டம் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.