18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் சத்ய பிரதா சாஹூ விளக்கம்
பதிவு : டிசம்பர் 04, 2018, 06:17 PM
டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்.எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.
டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்.எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகள் காலியாக இருப்பதால், எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என ஒரு தகவலும், மற்றொரு தரப்பினர், இப்போதைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் மேல்முறையீடு செய்துள்ளார்களா என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு உள்ளது. தற்போது வரை  தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் 18 பேரும் மேல் முறையீடு செய்யவில்லை என்ற தகவலை, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு , தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அனுப்பி உள்ளார். எனவே, சத்ய பிரதா சாஹூவின் விளக்கத்தை பரிசீலித்து, எப்போது தேர்தல் நடத்துவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

பாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி

உயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி

35 views

கடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

67 views

விறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

20 views

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

16 views

பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி

வேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.

17 views

3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவியில் பதிவான மர்ம ஆசாமிகள்

கும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.