10 ஆண்டுகள்... 8 ஆயிரம் கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது
பதிவு : டிசம்பர் 03, 2018, 07:47 PM
திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக போலியாக ஸ்கேன் சென்டர் நடத்தியதோடு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியாக ஸ்கேன் சென்டர் நடத்தி குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிப்பதோடு, கருக்கலைப்பு சம்பவங்களும் நடந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு சுகாதாரத்துறை நடத்திய அதிரடி சோதனையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட ஆனந்தி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் நடத்தி வந்த ஸ்கேன் சென்டரில் கருக்கலைப்பு செய்யப்படுவது உறுதியானதை தொடர்ந்து சென்டருக்கும் சீல்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த ஆனந்தி மற்றொரு பகுதியில் இதுபோல் முறைகேட்டில் ஈடுபடுவதாக மீண்டும் தகவல் வெளியானது. இதையடுத்து ஆனந்தியின் நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிக்க தொடங்கினர். அப்போது திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிக்கால் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்யப்படுவது உறுதியானது.... 

இதையடுத்து அங்கு சோதனைக்கு சென்ற மருத்துவ பணிகள் துணை இயக்குநர் தலைமையிலான குழு, தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது கருக்கலைப்பு செய்ய வருவோரை மறைவாக வைத்திருக்க ஏதுவாக சிறிய அளவிலான அறைகளை உருவாக்கி இருப்பதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொள்வதற்காக 6 ஆயிரம் ரூபாய் வாங்குவதும், கருக்கலைப்பு செய்வதற்கு அவரவர் வசதிக்கு ஏற்றார் போல 20 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை வசூலிப்பதும் தெரியவந்தது. திருவண்ணாமலையில் கருக்கலைப்பு செய்வதற்காக கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவது தெரியவந்தது. 

இதற்காக பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் இருப்பதும், அவர்கள் கமிஷனை பெற்றுக் கொண்டு இங்கு வாடிக்கையாளர்களை அழைத்து வருவதும் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது... கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசுக்களை கருவிலேயே இவர்கள் அழித்தது விசாரணையில் தெரியவந்தது... 

ப்ளஸ் 2 முடித்த பிறகு டிப்ளமோ நர்சிங் முடித்த ஆனந்தி ஸ்கேன் சென்டர் தொடங்கி இதுபோல் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு உடந்தையாக கணவர் தமிழ்செல்வன், வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கு உதவியாக ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் உள்ளிட்டோர் செயல்பட்டு வந்துள்ளனர். 

ஏற்கனவே சீல் வைத்த பிறகு, மீண்டும் அதுபோல் குற்றச் செயல்களை தொடர்ந்து செய்து வந்த ஆனந்தி உள்ளிட்ட 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்... 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3944 views

பிற செய்திகள்

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் : அதிவேகத்தால் நிகழ்ந்த விபத்து

கோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.

79 views

தேரோட்டம் - அமைச்சர், பக்தர்கள் பங்கேற்பு

கரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.

7 views

காங்கிரஸ் பிரமுகரின் வாகனம் திருட்டு : சி.சி.டி.வி.-யில் பதிவான காட்சிகள்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

20 views

இன்று தமிழகம் வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார்.

32 views

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டங்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

12 views

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு : 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் போலீஸ் காவலுக்கு அழைத்து வரப்பட்ட 3 பேர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.