ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
பதிவு : டிசம்பர் 03, 2018, 03:33 PM
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருந்தனர். இதனால் புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தார். இதனை அவசர வழக்காக நீதிபதிகள் எடுத்துக் கொண்டனர். ஜாக்டோ ஜியோ சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார். போராட்டத்தால் மாணவர்களுக்கும், மக்களுக்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதை பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உரிய ஆலோசனை நடத்தியபிறகு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி அரசு அறிவித்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை வரும் 10ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறினர். மேலும் இதுதொடர்பான ஒரு நபர் குழு பரிந்துரையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3897 views

பிற செய்திகள்

தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

8 views

கரிகால சோழீஸ்வரர் கோயிலில் தேர் வெள்ளோட்டம்

சிவகங்கை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் தேரோட்டத்துக்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

21 views

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம கும்பல் : ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் விரட்டி பிடித்த போலீசார்

சென்னையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்களை ஜிபிஎஸ் கருவி உதவியுடன் ஆட்டோவில் பின்​தொடர்ந்து சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.

55 views

தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

19 views

பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் : புதிய தேரை வடம் பிடித்து இழுத்த பொதுமக்கள்

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய திருத்தேர் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டு மேலாக நடைபெற்று வந்தது.

8 views

சாலையோரம் நின்றிருந்த காரில் திடீர் தீ - தீயால் காரின் முன்பக்கம் முழுவதும் சேதம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்கத்தில் திடீரென்று தீ பற்றியது

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.