ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பலி - குளிக்க சென்ற போது நேர்ந்த சோகம்...
பதிவு : டிசம்பர் 03, 2018, 02:49 AM
திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி, நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது குழந்தைகள் திருமுருகன், அபிராமி மற்றும் தனது மைத்துனரின் குழந்தைகள் ஆகாஷ், அஸ்வின் ஆகியோருடன் அங்குள்ள சலவாதி ஏரியில் குளிக்க சென்றுள்ளார்.  நான்கு குழந்தைகளும் ஏரியில் ஒன்றாக குளித்து கொண்டிருந்தனர். ஏரியின் கரையில் பாஸ்கர் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். திடீரென, நான்கு குழந்தைகளும் ஏரி நீருக்குள் மூழ்க தொடங்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினார்கள். எனினும், நான்கு குழந்தைகளும் உயிரிழந்ததால், சடலங்களாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இறந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

674 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5480 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6417 views

பிற செய்திகள்

இரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்

நினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.

6 views

அம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்

சென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.

10 views

குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.

8 views

சுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்

ஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5 views

4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.

52 views

கழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.