கேட் கீப்பர் என்னை தாக்கினார் - அதிமுக எம்.பி போலீசில் புகார்
பதிவு : டிசம்பர் 03, 2018, 01:24 AM
மாற்றம் : டிசம்பர் 03, 2018, 04:20 AM
கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி அதிமுக எம்.பி. உதயக்குமார், அம்மையநாயக்கனூர் போலீசில் புகார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திருச்செந்தூரிலிருந்து பாலக்காட்டிற்கு பாசஞ்சர் ரயில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து கொடைரோடு-அம்பாத்துரை இடையே அழகம்பட்டி ரயில்வே கேட்டை, கேட் கீப்பர் மணிமாறன் மூடியுள்ளார். இதனால் அந்த சாலையில் காத்திருந்த திண்டுக்கல் அதிமுக எம்.பி. உதயகுமார், தனது கார் வரும் போது எப்படி கேட்டை மூடலாம்  எனக்கூறி, கேட் கீப்பரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.  இதனை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ரயில்வே கேட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், இரவு ஏழரை மணியளவில் மதுரையில் இருந்து பாசஞ்சர் ரயில் வந்த போது கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அந்த ரயில் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு கேட்டை மூடப்பட்டதால், ரயில் மீண்டும் புறப்பட்டது. இது குறித்து கேட் கீப்பர் மணிமாறன், கொடை ரோடு ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி அதிமுக எம்.பி. உதயக்குமார், அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் செய்துவிட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

568 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3282 views

பிற செய்திகள்

பாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி

உயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி

29 views

கடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

60 views

விறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

18 views

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

16 views

பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி

வேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.

16 views

3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவியில் பதிவான மர்ம ஆசாமிகள்

கும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.