இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்
பதிவு : டிசம்பர் 01, 2018, 05:41 PM
சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச டயாலிசிஸ் மையம் செயல்படுவதால் தினமும் 20க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகிறார்கள்.
பொன்னேரியை அடுத்த ரெட்டேரி லட்சுமிபுரத்தில் சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டரி கிளப், டேங்கர் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சி மக்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சையை அளித்து வருகிறது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்வதற்கு சுமார் 2 ஆயிரம் ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வாரம் இரு முறையேனும் ரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கட்டணம் ஒருமுறைக்கு ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுவதால் நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடிவதில்லை.

இதனை கருத்தில்கொண்டு சென்னை மாநகராட்சி தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவசமாக , இந்த சேவையை செய்து வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். ரெட்டேரி பகுதியில் இலவசமாக டயாலிசிஸ் மையம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் மாதம்தோறும் சுமார்  4 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள்.

இதேபோல், சென்னையில் இலவச டயாலிசிஸ் மையங்கள் திருவேற்காடு, முகப்பேர், அம்பத்தூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மற்ற பகுதிகளிலும் சேர்த்து தமிழகத்தில் ஏழு இடங்களில் செயல்பட்டு வருவதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட உதவியாக இருப்பதாக நோயாளிகளுக்க  தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2709 views

பிற செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி : ரூ. 4 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி?

5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

28 views

அரைமணி நேரம் தொடர்ச்சியாக கரலாக்கட்டை சுற்றி சாதனை

கரலாக்கட்டை சுற்றுவதில் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் உலக சாதனை செய்துள்ளனர்.

13 views

தனியார் கல்லூரி பேருந்தை இரும்பு கடையில் விற்ற பலே திருடர்கள்

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் கல்லூரி பேருந்தை மர்ம நபர்கள் கடத்தி சென்று, இரும்பு கடையில் விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 views

போலீஸ் என கூறி சடலத்தின் மீது இருந்த நகைகள் கொள்ளை :

சென்னையில் போலீஸ் என கூறி சடலத்தின் மீது இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்

6 views

டிச.16ல் கருணாநிதி சிலை திறப்பு விழா : தொண்டர்களுக்கு திமுக தலைமை வேண்டுகோள்

டிச.16ல் கருணாநிதி சிலை திறப்பு விழா : தொண்டர்களுக்கு திமுக தலைமை வேண்டுகோள்

16 views

4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.