காடாக இருந்த பல்கலைக்கழகத்தை மூலிகை தோட்டமாக மாற்றிய துணைவேந்தர்
பதிவு : டிசம்பர் 01, 2018, 10:37 AM
அழிந்து வரும் மூலிகை செடிகளை வளாகத்திலேயே, வளர்த்து திருவள்ளூவர் பல்கலைக்கழகம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.
அழிந்து வரும் மூலிகை செடிகளை பாதுகாக்கும் வகையில், 600 வகை மூலிகை செடிகளை, வளாகத்திலேயே, வளர்த்து திருவள்ளூவர் பல்கலைக்கழகம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு, மாணவர்களும் சித்த மருத்துவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே, சேர்க்காடு பகுதியில் இயங்கி வரும், திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் 120 - க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இப்பல்கலைகழக துணைவேந்தராக  பதவியேற்ற முருகன்  ,  காடாக இருந்த பல்கலைக்கழகத்தை பசுமை வளாகமாக மாற்ற படிப்படியாக முயற்சிகளை மேற்கொண்டார். ஒன்றரை ஏக்கர் காலி இடத்தில் பல்கலைக்கழகத்தின் முன்பாக அரிய வகை மூலிகை செடிகளை கொல்லிமலை, மேற்கு தொடர்ச்சி என பல இடங்களில் தேடி கண்டுபிடித்து  நட்டுள்ளார்.  600 வகையான மூலிகை செடிகள் நடப்பட்டதால், பல்கலைக்கழக வளாகமே பச்சை பசேலென பசுமை வளாகமாக மாறியுள்ளது.

வெங்காரை, பவழமல்லி பெரியா நங்கை, சிறியாநங்கை, ஆடாதோடா , வெப்பாலை, நீராபிரம்மி சிறுகுறுஞ்சான் , நாகலிங்கம் நிலக்குறிஞ்சி நஞ்சு முறிஞ்சான், நொச்சி உள்ளிட்ட பல ரகங்களில் மூலிகை வகைகள் இங்கு வளர்க்கப் பட்டு வருகின்றன. கடந்த மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  இப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த போது, மூலிகை தோட்டத்தை பார்த்து பாராட்டியுள்ளார். 

மூலிகைகளை சித்த வைத்திய ஆராய்ச்சியாளர்களும் சித்த மருந்து தயாரிப்பாளர்களும் நேரடியாக இங்கே வந்து கேட்டு பறித்து செல்கின்றனர். வண்ணத்து பூச்சி, தும்பி, தேனீக்கள் போன்ற பூச்சிகள், அதிகமாக பூக்களை நாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து தேனீ  கூண்டுகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே  ஒரு அரசு பல்கலைக்கழகம் 600 வகையான மூலிகை செடிகளை நட்டு பராமரிப்பது சாதனையாக கருதப்படுகிறது. இதே போல், அரசு மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மூலிகை செடிகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

644 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5468 views

பிற செய்திகள்

கார் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : கார் மோதி காவலாளி ஒருவர் உயிரிழப்பு

ஈரோட்டில் கார் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்ட போது, கார் மோதி காவலாளி ஒருவர் உயிர் இழந்தார்.

3 views

ஆட்டம் பாட்டத்துடன் காவலர்கள் குடும்ப விழா : காவலர்கள் மன அழுத்தத்தை போக்க சிறப்பு ஏற்பாடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காவலர்கள் குடும்ப விழா ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டப்பட்டது.

6 views

பிரிந்து வாழும் தம்பதி - குழந்தைகளுக்கு காதணி விழா : ஊர் முழுவதும் கணவர் ஒட்டிய சுவர் விளம்பரம்

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் தன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

120 views

ரயில் மூலம் குழந்தைகள் கடத்தல் : கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் தென்னக ரயில்வே

ரயில்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க, தென்னக ரயில்வே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

17 views

மஞ்சு விரட்டு போட்டி - மாடு முட்டி இளைஞர் பலி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தி உள்ளது.

17 views

கியர் பாக்ஸ் உடைந்து நடுவழியில் நின்ற அரசு பேருந்து

கோவை மாவட்டம் காந்திபுரம், உக்கடம் வழியாக ஈச்சனாரி சென்ற அரசு பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்றதால், பயணிகள் சிரமத்திற்குள்ளாயினர்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.