சிலை கடத்தல் வழக்கு : "அபய்குமார் சிங் நியமனம் முறையற்றது" - நீதிமன்றம் அதிருப்தி
பதிவு : டிசம்பர் 01, 2018, 08:37 AM
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தொடர்பான தீர்ப்பில், பல அதிரடி கருத்துகளை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், தமிழகத்தில் உள்ளதாகவும், இந்த கோவில்களுக்கு சொந்தமான மதிப்புமிக்க சிலைகள், புராதன பொருட்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

திருடப்பட்ட சிலைகளை மீட்கவே, ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு செயல்பட வேண்டும் என உத்தரவிட்டதாகவும் அவர் மீது இந்த நீதிமன்றம் வைத்துள்ள நம்பிக்கையில் அணு அளவு கூட குறையவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறாமலும், சி.பி.ஐ.யின் கருத்தைக் கேட்காமலும் வழக்குகளை மாற்றி பிறப்பித்த அரசாணை சட்ட விரோதமானது எனவும், வெறும் யூகங்களின் அடிப்படையில், நான்கு அதிகாரிகளால் ஒரே நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கடுமையாக சாடினர். 

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அரசு எந்த ஒரு குற்றச்சாட்டையும் கூறவில்லை எனவும், கொள்கை முடிவு என்ற பெயரில் சட்ட விரோதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். மேலும், பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்த நீதிபதிகள், அவர் மீதோ, அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவோ நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டதோடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங்கை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவு முறையற்றது எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பவானி ஆற்றில் கிடைத்த பெருமாள் சிலையை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு

பவானி ஆற்றில் மீன்பிடித்தபோது ஐம்பொன்னாலான பழங்கால பெருமாள் சிலை சிக்கியது.

14 views

தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.

30 views

மதுரை பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு சிலை...

மதுரையின் தனி சிறப்பு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, ஆரப்பாளையம் ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது.

852 views

பிற செய்திகள்

தங்கத்தை கைக்கடிகாரத்தின் மூடியாக மாற்றி கடத்தி சிக்கிய மலேசிய நபர்...

தங்கத்தை கைக்கடிகார‌த்தின் பின்பக்க மூடியாக மாற்றி கடத்த முயன்ற மலேசிய நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.

1 views

இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...

ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

16 views

ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டாதது ஏன்? - ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஆட்சியருக்கு உத்தரவு

ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டுவது சம்பந்தமாக விடுத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு.

26 views

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்ந்துள்ளது.

29 views

அத்தி வரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...

அத்திவரதர் உற்சவத்தின் 18வது நாளான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து காட்சி தந்து வருகிறார்.

187 views

பாலியல் தொல்லை - கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற பெண்

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் முகநூல் மூலம் பழக்கமான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

129 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.