ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு
பதிவு : நவம்பர் 21, 2018, 10:21 AM
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெண்ணுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் போது சிலிண்டர் வெடித்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரின் மனைவி தாமரைச்செல்வி, மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சலில் அவதிப்பட்டதால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று மதியம் மூச்சு திணறல் அதிகமானதால், அவருக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்காக சிலிண்டரை செவிலியர்கள் எடுத்து வந்தனர். அப்போது சிலிண்டரின் வால்வை திறந்த போது எதிர்பாராத விதமாக திடீரென பிரஷர் வால்வு வெடித்து, கேஸ் அதிவேகமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிலிண்டரின் வாய்ப்பகுதி கேஸ் வெளியேறாதவாறு தடுத்தனர். இதற்கிடையில் மூச்சுதிணறலாலும், அதிவேகமாக கேஸை எதிர்கொண்டதாலும் தாமரைச்செல்வி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையை சூழந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நாகேஸ்வரர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் நடனம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சியில் நடன பள்ளி மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

35 views

ஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி? : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

73 views

உயிரிழந்த சித்தர் 2 நாட்களுக்கு பின் கும்பகோணம் அருகே அடக்கம்

கும்பகோணம் பகுதியில் பிறந்து, புனேவில் புகழ்பெற்ற சா​மியாராக விளங்கிய ஆறுமுக சாய்பாபா என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருவலஞ்சுழியில் காவிரி கரையோர ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

1969 views

கட்டிய பணத்தை திரும்ப தராத தனியார் நிதி நிறுவனம் முன் தீக்குளிக்க முயன்ற குடும்பம்

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

164 views

பிற செய்திகள்

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

39 views

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

31 views

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

9 views

அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

82 views

தி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

68 views

குஷ்பு புகார் - வாகன எண் இன்றி 10 நாட்களாக நின்ற சரக்கு லாரி பறிமுதல்...

வாகன எண் இன்றி 10 நாட்களாக தம் வீடு அருகே நின்ற சரக்கு லாரி குறித்து நடிகை குஷ்பு அளித்த தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

4021 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.