சென்னையில் 1 லட்ச ரூபாய்க்கு மாத வட்டியாக 2 தங்க காசு கொடுப்பதாக மோசடி
பதிவு : நவம்பர் 21, 2018, 05:05 AM
சென்னையில் ஒரு லட்ச ரூபாய்க்கு மாத வட்டியாக 2 கிராம் தங்கக்காசு கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி..
சென்னை சவுகார்பேட்டையில் அடகுக்கடை நடத்தி வரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கேன்ஜெண்ட் பண்டாரி, ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு மாத வட்டியாக 2 கிராம் தங்க காசு கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை அறிந்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.  நான்கு மாதங்களாக தங்க காசு வழங்காமல் காலம் தாழ்த்தியதால் பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு, பணம் கொடுக்கும் வரை தங்க கட்டிகளை வைத்துக்கொள்ளுமாறு  கொடுத்துள்ளார். சந்தேமடைந்த சிலர் தங்கத்தை சோதனை செய்ததில் அவை போலி என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். விசாரணையில் 6 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து பண்டாரியை கைது செய்த போலீசார்,  காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்

சந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

9 views

"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.

8 views

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது

6 views

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த தேயிலை பூங்கா

ஊட்டியில் அமைந்துள்ள தேயிலை பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

7 views

வீடு புகுந்து ஒருவர் வெட்டிக்கொலை : தலையை பையில் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்

மதுரை அய்யனார்புரம் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் லோகநாதன்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.