"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை
பதிவு : நவம்பர் 15, 2018, 03:42 AM
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சர்க்கரை நோயாளிகள் தினத்தை முன்னிட்டு  சர்க்கரை நோயின் தாக்கம் மற்றும் அதன் பக்க விளைவுகள் போன்றவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகள் பல்வேறு நிகழ்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 

சரியான உடற்பயிற்சி, முறையான உணவு வகைகள்,  வாழ்வியல் முறைகள் போன்றவற்றை கடைபிடிக்காததே இன்று  இளம் வயதிலேயே சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாக கோவையை சேர்ந்த மருத்துவர் ராஜேந்திரன் தெரிவித்தார். 

நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே ஒவ்வொருவரும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

இதனிடையே, சமூக ஊடகங்களில் நீரழிவு நோயை போக்குவதற்கு கருஞ்சீரகத்தை, வெந்தயத்தை உட்கொண்டால் போதும் என தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், உணவு முறை, உடற்பயிற்சி, மருந்து ஆகியவற்றிற்கு இந்த நோயை கட்டுப்படுத்துவதில் சமஅளவில் முக்கியத்துவம் உள்ளததாக நாகர்கோவிலை சேர்ந்த சித்த மருத்துவர் செல்வின் இன்னோசென்ட் தாஸ் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3945 views

பிற செய்திகள்

தனித்தேர்வர்கள் எழுதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 22 மற்றும் 25 ம் தேதி முதல் ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு பொது தேர்வை தனி தேர்வாக எழுதும் மாணவர்கள், வரும் 25ஆம் தேதி காலையில் இருந்து தேர்வுக் கூட அனுமதி சீட்டை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

25 views

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் : அதிவேகத்தால் நிகழ்ந்த விபத்து

கோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.

302 views

தேரோட்டம் - அமைச்சர், பக்தர்கள் பங்கேற்பு

கரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.

9 views

காங்கிரஸ் பிரமுகரின் வாகனம் திருட்டு : சி.சி.டி.வி.-யில் பதிவான காட்சிகள்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

38 views

இன்று தமிழகம் வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார்.

59 views

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டங்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.