ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் : கட்டண சேவைகளை ரத்து செய்தது தேவஸ்தானம்
பதிவு : நவம்பர் 15, 2018, 02:57 AM
திருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் 20 முறை புஷ்பயாகம் நடைபெற்றது. இதனையொட்டி கட்டண சேவைகளை தேவ​ஸ்தானம் ரத்து செய்திருந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு  கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரம் அன்று புஷ்பயாகம் நடத்துவது வழக்கம். புஷ்பயாகத்தை முன்னிட்டு இன்று காலை பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமையில் புஷ்ப யாகத்திற்காக 9 டன் மலர்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். காலை 9 மணி முதல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி உற்சவ மூர்த்திகளை கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வந்து ஜீயர்கள் முன்னிலையில்  திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அப்போது பால், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி,  துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களை கொண்டு சுவாமி உற்சவருக்கு புஷ்பயாகம் நடத்தப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களால் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டது. உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய இடத்தில் தரையில் இருந்து உற்சவர்களின் மார்பு பகுதி வரை மலர்களை நிரப்பி 20 முறை புஷ்ப யாகம் நடத்தபட்டது. புஷ்பயாகத்தை முன்னிட்டு சுப்ரபாதம் , சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகள் தவிர மற்ற அனைத்து  கட்டண சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நஞ்சுண்டேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது

22 views

ஏழுமலையான் கோயிலில் பி.வி.சிந்து சாமி தரிசனம்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவாமி தரிசனம் செய்தார்.

278 views

திருப்பதி ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தார்.

340 views

திருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது.

6770 views

திருப்பதி கோயிலில் சுரங்கம் தோண்டியதாக புகார்: உண்மைக்கு புறம்பானது என செயல் அலுவலர் விளக்கம்

திருப்பதி கோயிலில் புதையல் எடுக்க சுரங்கம் தோண்டப்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல் என, இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ தெரிவித்தார்.

647 views

பிற செய்திகள்

டெம்போ மீது கவிழ்ந்த லாரி - கோர விபத்து : லாரியின் டையர் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்

மகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி கவிழ்ந்த விபத்தில்13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

47 views

பீர் பாட்டில்களை சுமந்து வந்த லாரியில் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்திலிருந்து, கர்னூல் மாவட்டதிற்கு, பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

14 views

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : நடிகர் விவேக் ஓபராய் சர்ச்சை கருத்து

மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது.

301 views

தேர்தல் ஆணையரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் : 21 கட்சி தலைவர்கள் நாளை சந்திக்கின்றனர்

வியாழக்கிழமையன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் அணுக உள்ளன.

81 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி : மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டார்.

52 views

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எதிரொலி : மம்தா பானர்ஜியை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான,தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைக்கும் முயற்சியில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.