அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை சிறப்புகள்
பதிவு : நவம்பர் 13, 2018, 10:14 AM
அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
அழகும், தமிழும் சங்கமிக்கும் ஒரு இடமாக இருப்பவர் முருகப்பெருமான். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமானின் பெருமைகளை விளக்குகிறது அறுபடை வீடுகள். இதில் ஆறாம் படை வீடாக இருக்கிறது பழமுதிர்ச்சோலை. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள இந்த பழமுதிர்ச்சோலையில் அழகிய திருவுருவம் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் முருகன்.

தமது புலமையின் காரணமாக கர்வம் கொண்டிருந்த அவ்வைக்கு வாழ்க்கை பாடத்தை முருகன் கற்பித்த தலம் இது என்கிறது வரலாறு. ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்த முருகப் பெருமான், நாவல் மரத்தின் மீது ஏறி அமர்ந்திருந்த போது, தனக்கு பழத்தை பறித்து போடும் படி கேட்டுள்ளார் அவ்வை. அப்போது அவரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என கேள்வி எழுப்பிய முருகன், பழத்தை பறித்து போட்டுள்ளார். 

கீழே மணலில் விழுந்த பழத்தை எடுத்த அவ்வை அதில் இருந்த மணலை நீக்குவதற்காக ஊதியுள்ளார். அப்போது அவ்வையை பார்த்த முருகப்பெருமான், என்ன அவ்வையே...பழம் சுடுகிறதா? என கேட்டதால் அவ்வையின் ஆணவம் நீங்கியதாக கூறப்படுகிறது. அவ்வையும் முருகனும் உரையாடிய தலம் இது என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றும் கோயிலின் தலமாக நாவல் மரம் காட்சி தருகிறது. 

பொதுவாக ஆடி மாதத்தில் பழுக்கும் நாவல் மரம் இந்த தலத்தில் மட்டும் முருகனுக்கு உகந்த ஐப்பசி மாதத்தில் கனிந்து தொங்குவதை பார்க்க முடிகிறது. இது முருகனின் அதிசயமாகவே பக்தர்களால் பார்க்கப்படுகிறது. கோயிலின் மூலவராக காட்சி தரும் முருகன், வள்ளி, தெய்வானையுடன் இத்தலத்தில் காட்சி தருகிறார். முருகன் இந்த ஊரில் இருப்பதால் பசுமையும் வளமையும் ஒருங்கே பெற்ற ஊராக காட்சி தருகிறது பழமுதிர்ச்சோலை. மலையடிவாரத்தில் திருமால் காட்சி தரும் தலம் இது. சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த தலம் விளங்குகிறது. இந்த தலத்தில் வீற்றிருக்கும் முருகன், வெற்றிவேல் முருகனாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆறு நாட்கள் விரதமிருந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி விழா மட்டுமின்றி, கிருத்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் விமரிசையாக நடக்கிறது. திருமணத் தடை உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தினால் நினைத்தது கைகூடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. தன்னை நம்பி வருவோருக்கு எல்லாம் வாரி வழங்கும் வள்ளல் பெருமானாக வீற்றிருக்கிறார் பழமுதிர்ச்சோலை முருகப்பெருமான். 

தொடர்புடைய செய்திகள்

அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விழாக்கோலத்தில் கோயில்

அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

66 views

இன்று கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

கந்தசஷ்டி விழா இன்று துவங்குவதையொட்டி தூத்துக்குடி அருள்மிகு பாகம்பரியாள் உடனுறை சங்கரராமேஷ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சன்முகர் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

116 views

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் : தங்கமுத்துக்கிடா வாகனத்தில் குமரவிடங்க பெருமான்...

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை விடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்றிரவு குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

131 views

பிற செய்திகள்

பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு

பொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 views

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

158 views

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

9 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

19 views

கர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி

கலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

24 views

ரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...

ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.