இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் சிறீசேன...
பதிவு : நவம்பர் 10, 2018, 06:33 AM
நள்ளிரவு முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்து உத்தரவிட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரனில் விக்கிரம சிங்கேவுடன் ஏற்பட்ட மோதலால் வரை அதிபர் சிறிசேனா நீக்கி விட்டு ராஜபக்சேவை பிரதமராக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவுக்கு பிரதமர் இருக்கை வழங்கப்போவதில்லை என கூறியிருந்தார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்ததாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

"இலங்கையில் 2019 ஜனவரி 5-ல் தேர்தல்"

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வருகிற 19ஆம் தேதி தொடங்குவதாகவும், 26ஆம் தேதியன்று வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் எனவும் இலங்கை அரசின் அரசிதழில் கூறப்பட்டுள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதியன்று கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

"உச்ச நீதிமன்ற கருத்துக்கு பிறகே தேர்தல்"

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதமானது என ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி. அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்திருப்பதில்,  மனித உரிமை மற்றும் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு" - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்

இலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

101 views

2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு

இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.

46 views

"மாவீரர்களை நினைவுகூர அதிபர் சிறிசேன தடையாக இருக்கிறார்" - இலங்கை எம்.பி. விஜயகலா மகேஸ்வரன்

ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர அதிபர் மைத்ரிபால சிறிசேன தடையாக இருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

30 views

ஸ்ரீ சேனா - ராஜபக்சே அவசர சந்திப்பு

இலங்கை அதிபர் மைத்திர பால ஸ்ரீ சேனாவை, அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே, கொழும்பில் அவசரமாக சந்தித்தார்.

73 views

பிற செய்திகள்

எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்

இலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

9 views

படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம்...

நெதர்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம் வெளியாகியுள்ளது.

17 views

ஒட்டகப் பந்தயம் - கால்பந்து வீரர் பங்கேற்பு

கத்தார் நாட்டில் நடைபெற்ற ஒட்டகப் பந்தயத்தில், பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மார், தனது ஒட்டகத்துடன் கலந்து கொண்டார்.

10 views

பிரான்ஸில் நாய்களுடன் பனிச்சறுக்கில் அசத்திய வீரர்கள்...

பிரான்ஸில் நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் தங்கள் செல்ல பிராணிகளான நாய்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

14 views

ஸ்பெயின் : புனிதத்துவம் பெற நெருப்பை தாண்டும் குதிரைகள்...

குதிரைகள் நெருப்பை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி, ஸ்பெயினில் நடைபெற்றது.

7 views

நியூயார்க் : மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.