தேவர் மகன் - 2 : கிருஷ்ணசாமி எதிர்ப்பு...
பதிவு : நவம்பர் 07, 2018, 04:03 PM
மாற்றம் : நவம்பர் 07, 2018, 04:36 PM
தேவர் மகன் 2 ஆம் பாகம் குறித்த கமல்ஹாசனின் அறிவிப்புக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்...
தேவர் மகன் 2 ஆம் பாகம் குறித்த கமல்ஹாசனின் அறிவிப்புக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்... இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திரைப்படப் பெயர்களால் இருவருக்குள்ளும் மிகப்பெரிய இடைவெளி உண்டாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். கமலஹாசன் என்ற நடிகரை மிக மிக மதிக்கக் கூடியவன் நான்,  ஆனால், உங்கள் திரைப்படப் பெயர்கள் தமிழ்சாதிகளிடையே பிளவுகளையும், பிரிவினைகளையும் உருவாக்கியிருக்கிறது என்ற அடிப்படையில் அதை கடுமையாக நான் எதிர்த்திருக்கிறேன் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சியில் பாண்டே உடனான தங்களுடைய பேட்டியில் தேவர் மகன் -2 எடுப்பதாக கூறியிருந்ததை பார்த்ததாகவும், 1993ல் வெளியான அதன் முதல் பாகத்தால் தென்தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். தேவர் மகன் படத்தின் முதல் பாகத்தால்  விதைக்கப்பட்ட சாதிய விதையால் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையிலும் சாதிப் போர் நடந்துகொண்டே இருக்கிறது எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். உங்களுடைய அந்தப் படத்தால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நாங்கள் நஷ்ட ஈடு வேண்டும் என  வழக்குப் போட்டிருந்தால் உங்களிடத்தில் இருக்கிற சொத்துக்களே போதாது எனவும்  கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

ஏதோ ஒரு சூழலில் ஏற்பட்ட தவறை சரிசெய்யக் கூடிய வகையில், தேவேந்திரகுல வேளாளர்களுடைய பெருமையை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு படைப்பை நீங்கள் தந்திருக்க வேண்டும், ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என்றும், சமீபத்தில் கூட ஒரு எம்எல்ஏ சாதிய மனப்பான்மையோடு பேசி கைது செய்யப்பட்ட நிகழ்வு தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், தற்போது எடுக்கக் கூடிய படத்திற்கு"தேவேந்திரர் மகன்" என பெயர் வைத்தால் நீங்கள் உண்மையிலேயே சமநிலையை விரும்பக்கூடிய நடுநிலையாளராக அனைவராலும் கருதப்படுவீர்கள் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். வலுத்தவர்களுக்கே மீண்டும் இனிப்பை வழங்குவது எந்த விதத்திலும் உகந்தது அல்ல என்றும், யார் இனிப்புக்காக ஏங்குகிறார்களோ அவர்களுக்கு அதை வழங்குவது தான் உகந்தது.. உத்தமமானது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை தேவர் மகன் -2 என பெயரிடும் பட்சத்தில் முன்பு சண்டியருக்குக் கொடுத்த எதிர்ப்புகளைக் காட்டிலும் மிக மிகக் கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய சூழல்கள் உருவாகும் என்றும், அந்த படம் ஓடாமல் நிச்சயம் முடங்கும் என கிருஷ்ணசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். "தேவர் மகன் - 2 படம் விரைவில் வரும்"

தேவர் மகன் 2 ஆம் பாகம் விரைவில் வரும் என தந்தி டிவியின் சிறப்பு கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


பிற செய்திகள்

"நிவாரண பொருட்கள் லாரிகளை சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள்" - உதயகுமார், அமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும், அதிகாரிகளையும் சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள் என அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

54 views

புயல் பாதிப்பு - ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

76 views

பாஜக பலமான கட்சி தான் - திருமாவளவன்

பாஜகவை கண்டு நாங்கள் அஞ்சுகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

1689 views

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ஸ்டாலின் கோரிக்கை...

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

47 views

"கஜா புயல் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கஜா புயலால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

71 views

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார், முதலமைச்சர்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.