எந்த கட்சிக்கும் தாம் ஊதுகுழல் இல்லை - கமல்ஹாசன்
பதிவு : நவம்பர் 07, 2018, 01:51 PM
மாற்றம் : நவம்பர் 07, 2018, 01:52 PM
எந்த கட்சிக்கும் தாம் ஊதுகுழல் அல்ல என்றும், மக்களின் கருவியாக தாம் திகழ்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
எந்த கட்சிக்கும் தாம் ஊதுகுழல் அல்ல என்றும், மக்களின் கருவியாக தாம் திகழ்வதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிறந்தநாளான இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அதை சந்திக்க தாயாராக இருப்பதாக குறிப்பிட்டார். இலங்கை அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நமது நாட்டில் அரசியல் சரியில்லை என்று குற்றச்சாட்டு உள்ள நிலையில், பிற நாட்டு அரசியல் குறித்து பேசுவது தவறு என்றார். சுகாதாரமான ஊழலற்ற அரசியலை கொண்டு வருவதே லட்சியம் என்றும்  கமல்ஹாசன் கூறினார்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.