நிதி நிறுவனத்தின் ரூ.1137 கோடி மோசடி வழக்கு - நிதி நிறுவன முன்னாள் அதிகாரிகள் முன் ஜாமீன் ரத்து
பதிவு : நவம்பர் 06, 2018, 08:47 AM
ஆயிரத்து 137 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன முன்னாள் நிர்வாகிகளுக்கு முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
நிலம் வாங்கித் தருவதாக கூறி, 12 லட்சம் பேரிடம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, 'டிஸ்க் அசர்ட்' என்ற நிதி நிறுவன நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் சொத்துகளை விற்று பிரித்துக் கொடுக்க குழு அமைக்கப்பட்டது. இது குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிதி நிறுவன நிர்வாகிகள், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக குழு அறிக்கை அளித்தது. இதையடுத்து, முன்னாள் நிர்வாகிகளை ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜனார்த்தனன், உமாசங்கர், அருண் ஆகிய மூவரின் முன் ஜாமீனை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும் வரும் 8ம் தேதி மதுரை சிறப்பு நீதிமனறத்தில் ஆஜராகி பாஸ்போர்ட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர்களை காவல்துறை கைது செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

929 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4728 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2584 views

பிற செய்திகள்

"எல்லாருக்கும், அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும்" - நடிகை கவுதமி கோரிக்கை

பேருந்து செல்ல முடியாத கிராமங்களுக்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகள், பொதுமக்களை சென்றடைய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகை கவுதமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

17 views

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் அதிக பயனாளிகளை இணைத்து நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.

46 views

கஜா புயல் நிவாரணம் - தமிழக அரசு மீது மத்திய அரசு புகார்...

கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை தயாரிப்பதற்கு தேவையான விளக்கங்களை, தமிழக அரசு தரவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

40 views

குறைந்த விலையில் விவசாய கருவிகள் : கடின உழைப்பால் சாதிக்கும் வடமாநில இளைஞர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலையில் வட மாநில இளைஞர்கள் தயார் செய்து கொடுக்கும் விவசாய கருவிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

53 views

சென்னை : கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

13 views

சொந்த செலவில் மாணவிகளுக்கு உடைகள் வாங்கித் தந்த ஆசிரியை

வேலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகளை தன் சொந்த செலவில் செய்து கொடுக்கிறார் பள்ளியின் தலைமையாசிரியை. அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.