உலக அரங்கில் பரத நாட்டியத்தை அரங்கேற்றும் நடிகை...
பதிவு : நவம்பர் 05, 2018, 10:52 AM
உலக அரங்கில் பாராட்டுக்களைப் பெற்று வரும் இந்திய நடிகை ருக்மணி விஜயகுமார்.
இயக்குநர் பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில், காற்றில் பறந்து பறந்து பரதமும் பாலேவும் ஆடிய அந்தச் சுருள் முடிப் பெண் தான் இந்த ருக்மணி விஜயகுமார்... சமீபத்தில், நெதர்லாந்து நாட்டில் உள்ள, உலகப் புகழ் பெற்ற கார்சோ (karso) டான்ஸ் தியேட்டரில் நடனமாடி, அசத்தியுள்ளார். 'ஆனந்த தாண்டவம்' திரைப் படத்தில், 'கனாக் காண்கிறேன் கனாக் காண்கிறேன் கண்ணா' என்று பரதத்தில் அசத்தியிருப்பார். நடனத்தில் கவனம் செலுத்தி வரும் ருக்மணி, உலக அரங்கில் பரத நாட்டியத்தை அரங்கேற்றி அசத்தி வருகிறார். ஹைதராபாத்தில் வசித்து வரும் ருக்மணி, உலகம் முழுக்க நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். லண்டன், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பரத நாட்டிய பயிற்சி பட்டறையும் நடத்தி வருகிறார். கார்சோ டான்ஸ் தியேட்டரில், உலகின் தலைசிறந்த நடனமாடுபவர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடத்த முடியும். கடந்தாண்டு, ருக்மணி அங்கே நடனமாடினார். 
பரத நாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, 'மாடர்ன் டான்ஸ்' என்று சொந்தமாக நடனம் அமைத்து, நடனமாடியிருந்தார். ருக்மணியின் திறமையைப் பார்த்து வியந்து, இந்த வருடமும் கார்சோ டான்ஸ் தியேட்டரில் நடனமாட அழைத்தனர். லண்டனில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்த ருக்மணி, அக்டோபர் மூன்றாவது வாரம் நெதர்லாந்துக்குச் சென்று ஆடியதோடு, விருதையும் பெற்று வந்துள்ளார். யோகா, மாடலிங், நடிப்பு, நடனம், பரத நாட்டியம் என பன்முகத் திறமை கொண்டவர் ருக்மணி விஜயகுமார்... ஒடிசலான தேகம், துறு துறு கண்கள், சுருள் முடி, வசீகரச் சிரிப்புடன் வலம் வருகிறார். பொம்மலாட்டம்,  ஆனந்த தாண்டவம், கோச்சடையான், Bhajarangi, Shamitabh மற்றும் காற்று வெளியிடை என, சொற்ப படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்திய திரையுலகம் வாய்ப்பு தராதது நல்லது தான் போலிருக்கு... உலக அரங்கில் நட்சத்திரமாக, மின்னி வருகிறார் ருக்மணி...

பிற செய்திகள்

"எல்லாருக்கும், அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும்" - நடிகை கவுதமி கோரிக்கை

பேருந்து செல்ல முடியாத கிராமங்களுக்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகள், பொதுமக்களை சென்றடைய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகை கவுதமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

30 views

முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

18 views

சீதக்காதி வெளியாவதில் சிக்கல் இல்லை - விஜய்சேதுபதி

சீதக்காதி திரைப்படம் வெளியாகுவதில் சிக்கல் ஏதும் இல்லை என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

18 views

சி.சி.டி.வி மூலம் அம்பலமான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தல் நாடகம்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் அனைத்தும் அவரே அரங்கேற்றிய நாடகம் என சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

895 views

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்கு ஸ்டாலின், அமிதாப், கமல் வாழ்த்து...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

175 views

மீண்டும் பாட வந்துள்ள எஸ்.ஜானகி

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பிரபல பாடகி எஸ்.ஜானகி, 'பண்ணாடி' திரைப்படத்திற்காக, 2 பாடல்கள் பாடியுள்ளார்.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.