நகர பொறியாளர் அறையில் சோதனை எதிரொலி - ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு ரகசிய பேச்சுவார்த்தை?
பதிவு : நவம்பர் 04, 2018, 01:10 PM
மதுரை மாநகராட்சி நகர பொறியாளர் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் உள்ள நகர பொறியாளர் அரசு-வின் அறையில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் பட்டாசு பொருட்கள், வெள்ளி காசுகள் மற்றும்  கணக்கில் வராத 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால்,  இந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நகர பொறியாளர் அறையில் ஸ்மார்ட் சிட்டியாக மதுரையை மாற்றும் திட்டத்திற்கான ரகசிய டெண்டர் பேச்சுவார்த்தை நடந்ததாகவும்,  அப்போது மதுரையை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் நகர பொறியாளருக்கு 4 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சோதனைக்கு வந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் முக்கிய புள்ளிகளின் தலையீடு இருந்ததால் அந்த ஒப்பந்தக்காரரை விசாரிக்காமலேயே அனுப்பி விட்டதாகவும் வெளியாகி உள்ள தகவல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓவியங்களால் அழகாகும் கோவை மாநகரம்...

கோவை மாவட்டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் மாநகராட்சி ஒன்றிணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் பல வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

204 views

"வேலை கிடைக்காததால் விரக்தி" - பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை

கடலூரில் வேலை கிடைக்காத விரக்தியில், பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1393 views

எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்

எம்ஜிஆர் நூற்றாண்டு படபிடிப்பு தளத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிச்சாமி, விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

104 views

ஹாலிவுட் பட பாணியில் கொள்ளை

வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளையடிக்கப் போகும் வீடுகளை ஒன்றுக்கு ஐந்து முறை நோட்டம் விட்டு ஒரு தடயத்தைக் கூட விட்டுச் செல்லாமல் கொள்ளையடிக்கும் பலே கும்பலை சென்னை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது.

130 views

பிற செய்திகள்

"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

90 views

"மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது" - முதலமைச்சர் பழனிசாமி

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

83 views

"மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை" - சென்னை உயர் நீதிமன்றம்

மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை என்றும், மசாஜ் சென்டர்கள் பற்றிய தவறான எண்ணங்கள் மாற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

73 views

சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றிய அமைச்சர்

உடுமலை அருகே சாலையில் விழுந்து கிடந்த மரத்தை தீயணைப்புதுறை வீரர்களுடன் சேர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அகற்றியதோடு போக்குவரத்தை சரிசெய்தார்.

78 views

திடீரென்று தீப்பற்றி எரிந்த இரு சக்கர வாகனம்...

சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு அருகே, நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போது திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

84 views

விரைவு ரயில் எஞ்சினில் தீ விபத்து - பயணிகள் பீதி

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சப்தகிரி விரைவு ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயணிகள் பீதி அடைந்தனர்.

484 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.