அயோத்தியில் ராமர் கோயில் : அடுத்த மாதம் கட்டுமான பணி தொடங்கும் - விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அறிவிப்பு
பதிவு : நவம்பர் 04, 2018, 12:55 PM
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
அகில பாரதிய சந்த் சமிதி எனும் அகில பாரத துறவியர் பேரவையின் இரண்டு நாள் மாநாடு டெல்லியில், நேற்று தொடங்கியது. இதில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள், பல்வேறு மடாதிபதிகள், துறவிகள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்றார். இது சட்டத்தாலோ, அவசர சட்டத்தாலோ கட்டப்பட மாட்டாது என்றும், இருதரப்பு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கட்டுவோம் என்றும் அவர் கூறினா்.

இந்நிலையில் இரண்டாவது நாள் மாநாடு இன்று நடக்கிறது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி, மதுவுக்கு தடை

உத்திரபிரதேச மாநிலத்தில்,'அயோத்தி' மாவட்டம் முழுவதும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதித்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

3339 views

பிற செய்திகள்

காஷ்மீரில் கடுமையாக பனிச்சரிவு : பனிச்சரிவில் சிக்கிய போலீஸ் வாகனம்

காஷ்மீர் மாநிலம் சோனா மார்க் அருகே உள்ள ZOJILA என்ற இடத்தில் கடுமையாக பனிச்சரிவு ஏற்பட்டது.

18 views

மாற்றுத்திறன் கொண்ட இளைஞர்களுக்கான திருவிழா...

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாற்றுத்திறன் கொண்ட இளைஞர்களுக்கான கலைத் திருவிழா தொடங்கியுள்ளது.

9 views

பாஜகவில் இணைந்த முன்னாள் இஸ்ரோ தலைவர் பாராட்டு

இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பாடுபடுவதாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

25 views

கே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு சிலை : கர்நாடக அரசு திட்டம்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

41 views

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் : கேரள முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

சபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

129 views

சத்தீஸ்கரில் பேனர் கலாச்சாரம் கிடையாது - தமிழர்கள்

சத்தீஸ்கரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என சத்தீஸ்கரில் உள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

204 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.