"ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை சந்திக்க தயார்" - அமைச்சர் தங்கமணி
பதிவு : நவம்பர் 03, 2018, 09:04 AM
ஆட்சியை கலைக்க முடியாததால்,ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.
ஆட்சியை கலைக்க முடியாததால், ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக 47ஆம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்று பேசிய அவர், தூத்துக்குடி கலவரத்துக்கு வெளியாட்களே காரணம் எனவும், மக்கள் விருப்பத்தை ஏற்று ஆலை மூடப்பட்டதாகவும் கூறினார். தன் மீது ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார் எனவும் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.