60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேத்தியாதோப்பு சந்தை...
பதிவு : அக்டோபர் 17, 2018, 08:55 PM
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த சந்தை.. 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சந்தை என்பது இதன் சிறப்பம்சம்..
இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. பச்சை மிளகாய், கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய், உருளைக் கிழங்கு என எல்லா காய்கறிகளும் இங்கு குறைவான விலையில் கிடைக்கிறது. அன்றாட பயன்பாட்டிற்கு 10 ரூபாய் கூறுகளாக வாங்கிச் செல்லும் மக்களும் உண்டு. இங்கிருந்து வாங்கிச் சென்று மற்ற பகுதிகளில் விற்பனை செய்வதற்காக தொடர்ந்து வந்து செல்லும் வியாபாரிகளையும் பார்க்க முடியும்..நாட்டுக் கோழி முட்டைகள், கருவாடு என எல்லாம் கிடைக்கும் ஒரு இடமாக இந்த சந்தை உள்ளது. மத்து, அரிவாள் மனை, கத்தி, கடப்பாறை என இரும்பு சாமான்களையும் மொத்தமாக வாங்கிச் செல்ல ஏற்ற இடம்... பூச்செடிகள், மரக்கன்றுகள் என எல்லாம் குறைவான விலையில் கிடைப்பது இந்த சந்தையில் தான். இதற்காகவே பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். அப்பளம், தின்பண்டங்கள், வடகம்  என எல்லாம் இங்கே கிடைக்கிறது. கடலூர் மாவட்டத்தை சுற்றிலும் விவசாயம் பிரதான தொழில் என்பதால் இங்குள்ள விவசாயிகள் தங்கள் பொருட்களை இந்த சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். வாரந்தோறும் புதன் கிழமை நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடக்கிறதாம். அதிலும் விழா நாட்கள் என்றால் விற்பனை களைகட்டுகிறது. 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வாழ்வளிக்கும் ஒரு இடமாக இருக்கிறது சேத்தியாத் தோப்பு சந்தை.. 


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2349 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2447 views

பிற செய்திகள்

விருத்தாசலம் : குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

7 views

சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்த தேசிய கொடி

சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்து கொண்டிருந்த தேசிய கொடி பற்றி தகவல் வெளியானதும் மாற்றப்பட்டது.

48 views

"சீரமைப்பு பணி செய்யும் எங்களுக்கு உணவு இல்லை" - பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் குற்றச்சாட்டு

கஜா புயலால் குப்பை மேடாக காட்சியளித்து வரும் பட்டுக்கோட்டை கிராமத்தை சுத்தம் செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

30 views

புதுக்கோட்டை : 'கஜா' புயலால் நர்சரி கார்டன் தொழில் பாதிப்பு

புதுக்கோட்டையில் கஜா புயல் தாக்கத்தால் நர்சரி கார்டன் தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

21 views

மழையால் நிவாரண பணிகளில் பாதிப்பு இருக்காது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மழை நீடித்தாலும் நிவாரண பணிகள் பாதிக்காது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.