கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் விசாரணை
பதிவு : அக்டோபர் 13, 2018, 05:05 PM
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த ஆய்வில், மயில், ராகு, கேது உள்ளிட்ட 3 சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளிடம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னை வியாசர்பாடியில் உள்ள திருமகள் இல்லத்தில், சிறிது நேரம் விசாரணை நடந்தது. முதற்கட்ட விசாரணையில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், மேலும் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

39 views

ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக தஞ்சையில் அரண்மனை?

தொழிலதிபர் ரன்வீர்ஷா தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் அரண்மனைகள், பங்களாக்கள் வாங்கி குவித்திருப்பதால், அங்கெல்லாம் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சோதனை செய்ய திட்டமிட்டு உள்ளது.

4818 views

பெரியார் சிலை மீது பைக்கில் வந்த இளைஞர் காலணி வீச்சு

சென்னையில் பெரியார் சிலை மீது இளைஞர் ஒருவர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது

534 views

மதுரை பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு சிலை...

மதுரையின் தனி சிறப்பு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, ஆரப்பாளையம் ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது.

608 views

பிற செய்திகள்

இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை கப்பல் அத்துமீறல் - கைது அச்சத்தில் கரை திரும்பிய மீனவர்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள், நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

15 views

ஆணழகன் போட்டிகளில் அசத்தும் 58 வயது நபர்

60 வயதை நெருங்கிவிட்ட போதிலும் ஆணழகன் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்து சாதிக்கும், தன்னம்பிக்கை மனிதர்

126 views

இளம்பெண் மீது ஆசிட் வீச்சு : தொழிலாளி கைது

ஆட்டோ டிரைவர் பாலமுருகன் என்பவரின் மனைவியான காயத்திரி, கணவரை பிரிந்து 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.

70 views

அண்ணா வளர்ப்பு மகனுக்கு வழங்கப்பட்ட அரசு குத்தகை நிலம் - அபகரிக்க முயற்சி என மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க.வினர் மனு

மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்கு கடந்த 1995 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது.

6 views

குருவித்துறை பெருமாள் கோயிலில் கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.

36 views

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் : சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு...

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.