பிறந்தநாளில் அரசியல் கட்சியை அறிவிக்கிறாரா ரஜினி?
பதிவு : அக்டோபர் 13, 2018, 04:44 PM
நடிகர் ரஜினிகாந்த், தனது பிறந்த நாளன்று திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி, புதிய கட்சியின் பெயரை, அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
* ரஜினி மக்கள் மன்றத்தை, முறைப்படி அரசியல் கட்சியாக மாற்ற ர​ஜினி முடிவு செய்துள்ளதாகவும், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, தனது பிறந்தநாளான டிசம்பர் 12ந் தேதி வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்காக, தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில், மிகப்பெரிய மாநாட்டை நடத்தி, அதில் கட்சியின் பெயரையும், கட்சிக் கொடியையும் அவர் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

* இதற்காக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜசேகர், தலைமையிலான குழுவும், மாநாட்டிற்காக மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைக்க, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மன்ற பொறுப்பாளர் ஸ்டாலின் தலைமையில், மொத்தம் 10 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

* திருச்சி மாநாட்டுக்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளை தனி ரயில்கள் மூலம் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இதனிடையே, மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள மாற்று கட்சியினர், விரும்பினால், அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்ள ரஜினி தயாராக இருப்பதாகவும், திருச்சி மாநாட்டில் அப்படி ஏராளமானோர் இணைய வாய்ப்புள்ளதாகவும் மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

126 views

ரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ

பிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

638 views

"ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது" -சுப்பிரமணியன் சுவாமி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

450 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்றது.

24 views

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவக்கம் : மேகதாது விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ள நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதம் நடத்த அதிமுக எம்.பி.க்கள் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

22 views

20 ரூபாய் நோட்டுக்கு ஆசைப்பட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஏமாந்து விட்டனர் - மதுசூதனன், அ.தி.மு.க.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடசென்னை அதிமுக சார்பில் இரண்டாவது கட்டமாக, 18 டன் உணவு பொருட்கள் மற்றும் உடைகள் அனுப்பிவைக்கப்பட்டன

11 views

5 மாநில தேர்தல் முடிவுகள் : தலைவர்களின் கருத்துக்கள்

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

427 views

பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை நன்றாக காட்டுகிறது - நடிகர் ரஜினி

5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சி, தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

659 views

5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிஸ் கட்சி முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்

5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதை, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.