சென்னையில் ரிய​ல் எஸ்டேட் துறை தொடர்பான பயிலரங்கம் - மத்திய அமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
பதிவு : அக்டோபர் 12, 2018, 03:25 PM
ராணுவம் மற்றும் ரயில்வே துறையின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசிடம் வழங்கினால், ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
* ரியல் எஸ்டேட் துறையில் நம்பக்கத்தன்மை மற்றும் வெளிப்படைதன்மை குறித்த பயிலரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியி​ல் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ராணுவம், ரயில்வே துறையின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசிடம் வழங்கினால், இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 

* பயிலரங்கத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் ஹர்தீப் பூரி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை தேசிய ஆணையத்தின் விதிமுறைகளுக்கும்,  தமிழகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கும் பல வேற்றுமைகள் உள்ளதாகவும், இதில் சில திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும்  வலியுறுத்தினார். 

* ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் அடிப்படையில், மாநில அளவில் செயல்படும் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு நிரந்தர தலைமையை நியமிக்க வேண்டும் என்றும்,மெட்ரோ ரயில் இரண்டாம் வழித்தடத்திற்கு நிதி ஆதாரம் பெற ஜப்பான் பன்னாட்டு நிதி முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

48 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2099 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

488 views

பிற செய்திகள்

மு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.

13 views

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை - ராமதாஸ், வாசன் வரவேற்பு

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ், வாசன் தெரிவித்துள்ளார்.

25 views

ராகுல்காந்தியுடன் கனிமொழி சந்திப்பு

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது வீட்டில் திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.

50 views

"ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும்" - திருமாவளவன்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.

29 views

"கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை தி.மு.க.,கொள்கை பிடிப்போடு கூட்டணி அமைப்பதில்லை"- செல்லூர் ராஜூ

கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை தி.மு.க.,கொள்கை பிடிப்போடு கூட்டணி அமைப்பதில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.