"குழந்தைகளை கவர இந்தாண்டு தீபாவளிக்கு 20 வகையான புதிய பட்டாசுகள்"
பதிவு : அக்டோபர் 12, 2018, 11:07 AM
தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட பட்டாசு ரகங்கள் குழந்தைகளை கவர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
தீபாவளிக்கு  24 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி இறுதி கட்டப்பணி சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதியில் முழுவீச்சில் நடந்து  வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. 

குழந்தைகளைக் கவரும் வகையில் KINDER JOY  TITAN PARADISE  COLOUR BALL HITECH  போன்ற 20-க்கும் மேற்பட்ட புதுவகையான பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்தனர். 

ஏழு முதல் 75 செ.மீ  வரை அளவு உள்ள வண்ண வண்ண கலர்களில் கம்பி மத்தாப்புக்களும் , புது வரவாக 4 வண்ணங்களை கொண்ட  ஒரே கம்பி  மத்தாப்புக்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

உண்மையான துப்பாக்கி போன்று விற்பனைக்கு வந்து உள்ள விதவிதமான துப்பாக்கிகளுக்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாகவும், இளைஞர்களை கவரும் வகையில் சமூக வலை தளங்கள் பெயர்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும்  தெரிவித்தனர். 

தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதியினருக்கு என பிரத்தியேகமாக 50 அடி உயரம் வரை சென்று  வெடிக்கும் வகையில் இதய வடிவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

436 views

பிற செய்திகள்

பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழா

ஆரணி அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

4 views

ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் - நோய் பரவும் அபாயம்

ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

16 views

சுற்றுலா பயணிகளைக் கவரும் சிம்ஸ் பூங்கா

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. அங்குள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

16 views

பெட்டி கடையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

47 views

தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.

5 views

சேமிப்பு கிடங்கில் தீ விபத்து - ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

தூத்துக்குடியில், குறுக்குச் சாலையில் உள்ள நவதானியம் மற்றும் பருத்தி ஆகியவை சேமித்து வைத்திருக்கும் குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.